தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே பல பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் 9 செ.மீ. மழையும், காஞ்சிபுரத்திலும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திலும் தலா 7 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
அடுத்ததாக சோழவரத்தில் 5 செ.மீ மழையும், சென்னை, காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகம் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழையும் பெய்துள்ளது.
சென்னை விமான நிலையம், திருவள்ளூர், செம்பரம்பாக்கம், கொரட்டூர், பள்ளிப்பட்டு, பொன்னேரி, பூந்தமல்லி, அரக்கோணம், வேலூர் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
தாமரைப்பாக்கம், செங்கல்பட்டு, வாலாஜாபேட்டை ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழை பெய்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே உட்புற பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.