Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தடையில்லா சான்றிதழ் பெறாத 57,000 கட்டட உரிமையாளர்களுக்கு தா‌க்‌கீது!

தடையில்லா சான்றிதழ் பெறாத 57,000 கட்டட உரிமையாளர்களுக்கு தா‌க்‌கீது!
, வியாழன், 25 செப்டம்பர் 2008 (13:23 IST)
''தமிழகம் முழுவதும் தீயணைப்பு துறையின் தடையி‌ல்லா சான்றிதழ் பெறாத 57,000 கட்டிட உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை தா‌க்‌கீதஅனுப்பப்படும்'' என்று தமிழக தீயணைப்புதுறை இயக்குனர் ஷியாம்சுந்தர் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

திரு‌ச்‌சி‌யி‌லசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சிதமிழக தீயணைப்புதுறை இயக்குனர் ஷியாம்சுந்தர், தமிழக‌த்த‌ி‌லபலமாடி கட்டடங்கள், சிறப்பு கட்டடங்கள், தொழிற்சாலைகள் என 3 விதமாக கட்டடங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. 15.25 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ள கட்டடங்கள் பல மாடிக்கட்டடங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த அளவிற்கு கீழ் உள்ள கட்டடங்கள் சிறப்பு கட்டடங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இத்தகைய கட்டடங்களில் தீவிபத்துகள் ஏற்பட்டால் அங்கிருப்பவர்கள் தப்பிக்க மாற்றுவழிபாதை, தானியங்கி நீர்தெளிப்பான், கியாஸ் டிடெக்டர், குறிப்பிட்ட அளவு தண்ணீர், கீழிருந்து மேல்பகுதிக்கு தண்ணீரை கொண்டு செல்வதற்கான குழாய்வசதி ஆகியவை இருக்க வேண்டும். அப்போதுதான் தீயணைப்பு துறையின் சார்பில் தடையில்லா சான்றிதழ் (என்.ஓ.சி.) வழங்கப்படும். இந்த சான்றிதழை வணிகரீதியான கட்டடங்கள் கட்டாயமாக பெற வேண்டும்.

தமிழக‌‌த்‌தி‌ல் 73,000 வணிகவளாகங்கள் மற்றும் தொழிற்சாலை கட்டடங்கள் உள்ளன. இவற்றில் 16,000 கட்டங்களுக்கு மட்டுமே தடையில்லா சான்றிதழ் பெறப்பட்டுள்ளன. மீதமுள்ள 57,000 கட்டடங்களுக்கு தடையில்லா சான்றிதழ் பெறவில்லை. தடையில்லா சான்றிதழ் பெறாத 57,000 கட்டடங்களின் உரிமையாளர்கள் உடனடியாக அதனை பெற வேண்டும் என அறிவுறுத்தி இந்த மாத இறுதிக்குள் சம்மந்தப்பட்டவர்களுக்கு எச்சரிக்கை தா‌க்‌கீதஅனுப்பப்படும்.

கட்டட உரிமையாளர்கள் தங்கள் உடைமைகள், ஊழியர்கள், வாடிக்கையாளர்களின் நலன் சமூகத்தில் உள்ள தங்கள் நன்மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு கண்டிப்பாக இந்த சான்றிதழை பெற வேண்டும் எ‌ன்று ‌ஷியா‌ம்சு‌ந்த‌ரகூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil