சென்னையில் இன்று மாலை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே உட்புற பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே இலேசான மழை பெய்தது.
சென்னையில் வாகனம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனிடையே இன்று மாலை சென்னையில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. ஆங்காங்கே சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல் ஓடியது. வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள்.
மதியம் வரை வாட்டி எடுத்த வெயில், மாலையில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெயில் கொடுமையால் தவித்த மக்களுக்கு இந்த மழை சற்று ஆறுதல் அளித்தது.