Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌கோ‌‌வி‌ல்ப‌ட்டி‌யி‌ல் விவசாய ‌நில‌ங்களை கையகப்படுத்த ஜெயலலிதா எ‌தி‌ர்‌ப்பு!

‌கோ‌‌வி‌ல்ப‌ட்டி‌யி‌ல் விவசாய ‌நில‌ங்களை கையகப்படுத்த ஜெயலலிதா எ‌தி‌ர்‌ப்பு!
, புதன், 24 செப்டம்பர் 2008 (13:31 IST)
விமானப்படைத்தளம் அமைப்பதற்காக, ஏழை விவசாயிகளின் நிலங்களை அபகரித்து அவர்களின் வாழ்வாதாரங்களை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் மத்திய அரசைக் கண்டித்தும், தி.மு.க. அரசைக் கண்டித்தும், இத்திட்டத்தை உடனடியாகக் கைவிட வலியுறுத்தியும் அ.இ.அ.‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் நாளை கோ‌‌வி‌‌ல்ப‌ட்டி‌யி‌ல் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம் நடைபெறு‌கிறது எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், விமானப்படைத்தளம் அமைப்பதற்காக, தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில் உள்ள ஏழை, எளிய விவசாயிகளின் 2,500 ஏக்கர் நிலங்களை மத்திய அரசு கையகப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இப்பகுதியில் உள்ள ஏழு பெரிய குளங்களின் வாயிலாக மேற்படி நிலங்களில் அப்பகுதி மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இப்பகுதி நல்ல நீர்ப்பிடிப்பு உள்ள பகுதியாகவும், மண்வளம் நிறைந்த பகுதியாகவும் உள்ளதால், விவசாயிகள் தங்களது நிலங்களில் அதிக மகசூல் தரக்கூடிய மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பழமரங்களையும், அதிக அளவு காய்கறிகளையும் பயிரிட்டுள்ளனர்.

தமிழகத்திலேயே மிக அதிகமாக பேரிச்சம்பழம் இந்தப் பகுதியில்தான் பயிரிடப்படுகிறது. இது தவிர, நொச்சிக்குளம் என்ற கிராமத்தில் வசித்து வரும் 250 ஆதிதிராவிடர் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு 50 ஆண்டு காலமாக சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் கூட்டுப் பண்ணைகள் அமைத்து அதிக அளவில் காய்கறிகளை பயிர் செய்து வருகின்றனர்.

இ‌ந்த கிராமங்களில் உள்ள நிலங்களை கையகப்படுத்துவதனால் விவசாயமும், நீர்வளமும், அதனைச் சார்ந்த வருமானமும் வெகுவாக பாதிக்கப்படுவதோடு மட்டும் அல்லாமல், விவசாயிகளின் வீடுகள், விளை நிலங்கள், உடைமைகள் ஆகியவற்றை இழக்கும் பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்படுவார்கள். இது தவிர, இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் விவசாய கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரங்கள் சிதைந்துவிடும் சூழ்நிலை உருவாகும்.

எனவே, விமானப்படைத்தளம் அமைப்பதற்காக, ஏழை, எளிய விவசாயிகளின் நிலங்களை அபகரித்து அவர்களின் வாழ்வாதாரங்களை சீர்குலைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்தும், தி.மு.க. அரசைக்கண்டித்தும், இத்திட்டத்தை உடனடியாகக் கைவிட வலியுறுத்தியும், தூத்துக்குடி மாவட்ட அ.இ.அ.‌தி.மு.க. சார்பில் நாளை ( 25ஆ‌ம் தே‌தி) காலை 10 மணி‌க்கு கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்'' எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil