Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள்!

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்ச‌ா‌மி!

Advertiesment
மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள்!
, புதன், 24 செப்டம்பர் 2008 (13:10 IST)
ஈரோடு அருகே மனைவியை கொன்ற கணவனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி கோபி நீதிம‌ன்ற‌ம் தீர்ப்பளித்தது.

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடியை சேர்ந்தவர் யோகசாமி (55). இவரது மனைவி சகுந்தலா (50). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் 18ஆம் தேதி யோகசாமி குடித்துவிட்டு தன் மனைவி சகுந்தலாவிடம் தகராறு செய்துள்ளார். அன்று இரவு வழக்கம்போல் சகுந்தலா ூங்கிவிட்டார். அப்போது யோகசாமி, மனைவி சகுந்தாவை கம்பியால் குத்தியும், கட்டையால் அடித்தும் கொடூரமாக கொலை செய்தார்.

இந்த கொலை வழக்கு கோபி விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி ஜெகநாதன் விசாரித்து நேற்று மாலை தீர்ப்பளித்தார். அந்த தீர்ப்பில், மனைவியை கொலை செய்த யோகசாமிக்கு ஆயுள் தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்தார்.

Share this Story:

Follow Webdunia tamil