''தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சியை ஏன் கலைக்கக்கூடாது'' என்று விளக்கம் கேட்டு தமிழக அரசு தாக்கீது அனுப்பி உள்ளது.
தேனி மாவட்டம், சின்னமனூர் நகராட்சியின் நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரது நடவடிக்கைகளும் சட்டப்படி அமையவில்லை என்றும்; பொது நலனுக்கு ஊறு விளைவிக்கும் விதமாக அமைந்துள்ளதென்றும் அரசின் கவனத்திற்கு தெரியவந்துள்ளதை அடுத்து, சின்னமனூர் நகர்மன்றத்திற்கு தமிழ்நாடு மாவட்ட நகராட்சிகள் சட்டம் பிரிவு 41ன் கீழ் நகர்மன்றத்தை ஏன் கலைக்கக்கூடாது என்று ஏழு நாட்களுக்குள் விளக்கம் கேட்டு அரசு கடிதம் அனுப்பியுள்ளது.
உரிய விளக்கத்தைப் பெற்று தக்க நடவடிக்கை எடுக்க அரசு முடிவு செய்துள்ளது என்று தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.