பெருந்துறையில் சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர் விசாரணை!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி!
முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா குறித்த வழக்கு சம்பந்தமாக பெருந்துறை பகுதியில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
முன்னாள் கைத்தறி துறை அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா மீது குற்றம்சாற்றப்பட்ட ஆட்கடத்தல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி முன்னாள் அமைச்சர் மீதான இரு வழக்குகள் குறித்து பெருந்துறை பகுதியில் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட பழனிச்சாமி, மலர்விழி, மற்றும் குகமணி ஆகிய மூன்று பேரிடம் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையினர் விசாரணை நடத்தினர். சி.பி.சி.ஐ.டி. விசாரணை பெருந்துறை மற்றும் ஈரோடு பகுதியில் இருக்கும் தி.மு.க., புள்ளிகளுக்கிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.