சென்னை, தி.நகரில் உள்ள அஞ்சல் துறை சென்னை மாநகர மத்திய மண்டல முதுநிலை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 30ஆம் தேதி (செவ்வாய்கிழமை) காலை 11 மணி முதல் அஞ்சல் குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இந்த பிரிவுக்குட்பட்ட அஞ்சல் சேவை குறைபாடுகள், பதிவுத் தபால், பார்சல், மணியார்டர் உள்ளிட்டவை தொடர்பான குறைகள் ஆகியவற்றை உரிய விவரங்கள், அனுப்புனர், பெறுநர் முகவரியுடன் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.
சேமிப்பு கணக்கு, பணச் சான்றிதழ்கள் கணக்கு தொடர்பான குறைகளையும் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகர மத்திய மண்டல முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.