சாக்குபையில் குழந்தையை கடத்திய வாலிபர் கைது!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி!
ஈரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை சாக்குபையில் அடைத்து கடந்த முயன்ற வாலிபரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
ஈரோடு சஞ்சய்நகர் ராஜா வீதியை சேர்ந்த பாபு, ராணி என்ற தம்பதியினருக்கு கார்த்தி (4), ஆகாஷ் (2) என்ற குழந்தைகள் உள்ளனர். பாபு உணவு விடுதியில் பணியாற்றுகிறார். ராணி கட்டட பணிக்கு செல்கிறார். அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி, சங்கீதா தம்பதியினருக்கு பூவரசன் (8), பிரியா (3) என்ற குழந்தைகள் உள்ளனர்.
இந்த குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தபோது அந்த பகுதியில் ஒரு வாலிபர் சாக்குபையில் பழைய காகிதங்களை சேகரித்தவாறு குழந்தைகளிடம் வந்தார்.
குழந்தைகள் பிரியா மற்றும் ஆகாஷ் ஆகியோரை தனியாக அழைத்து சென்று பிரியாவை சாக்குபையில் அடைத்தார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த வாலிபரை பிடித்து சாக்குபையில் இருந்த பிரியாவை மீட்டனர். பின்னர் அந்த வாலியரை அடித்து உதைத்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.
பிடிபட்ட வாலிபர் பெயர் குமார் (30) என்றும் இவர் ஈரோடு அருகே உள்ள பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. மேலும் இவரிடம் விசாரணை நடக்கின்றது.