முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி தன்னை முன்னதாக விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.
இந்த மனு மீதான விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில், அதன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி எஸ்.நாகமுத்து இன்று தள்ளி வைத்தார்.
தொடர்ந்து 2-வது நாளாக விவாதம் செய்த ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணிய சுவாமி, ராஜிவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி தன்னை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும் என்று கோர முடியாது என்றார்.
மேலும், நளினியின் கருணை மனுவின் அடிப்படையில் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை சட்டப்படி ஒரு முறை மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்றார்.
ஆகையால், நளினி முன்கூட்டியே விடுதலை செய்ய கோரமுடியாது என்றும் அதற்கு சட்டத்தில் எவ்வித இடமும் இல்லை என்றும் நீதிபதி எஸ். நாகமுத்துவிடம், சுப்பிரமணிய சுவாமி கூறினார்.
இதையடுத்து, நளினி தாக்கல் செய்த இந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி எஸ். நாகமுத்து தள்ளி வைத்தார்.