அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா தலைமையில் நாளை சென்னையில் அக்கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை வானகரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு ஜெயலலிதா முன்னிலையிலும், அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையிலும் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் பொதுக்குழு, செயற்குழு, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 2,000 க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான உத்திகளை வகுப்பது, கூட்டணியை முடிவு செய்வது போன்றவை குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை ஜெயலலிதாவுக்கு அளிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
மின்வெட்டு, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு, சட்டம், ஒழுங்கு பிரச்னை, மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது.
பொதுக்குழு முடிவில் பேசும் ஜெயலலிதா, பல்வேறு அறிவிப்புக்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.