Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2009ஆ‌ம் ஆ‌ண்டு இறு‌தி வரை சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது : மு.க.ஸ்டாலின்!

2009ஆ‌ம் ஆ‌ண்டு இறு‌தி வரை சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது : மு.க.ஸ்டாலின்!
''ஆந்திர மாநில‌ம் கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு த‌ண்‌‌ணீ‌ர் திறந்துவிடப்பட்டு‌ள்ளதா‌ல் 2009ஆ‌ம் ஆ‌ண்டு இறு‌தி வரை சென்னையில் ுநீர் தட்டுப்பாடு இருக்காது'' என்று உ‌ள்ளா‌ட்‌சி‌த்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌‌ர்.

webdunia photoFILE
கிரு‌‌‌ஷ்ணா ந‌தி‌நீ‌ர்‌‌த் ‌தி‌‌ட்ட‌த்த‌ி‌ல், க‌ண்டலேறு-பூ‌ண்டி கா‌ல்வா‌யி‌ல், ச‌த்யசா‌ய் அற‌க்க‌ட்டளை செ‌ய்த ‌சீரமை‌ப்பு‌ப் ப‌ணிகளை உ‌ள்ளா‌ட்‌சி‌த்துறை அமை‌ச்‌ச‌ர் மு.க.‌ஸ்டா‌லி‌ன், பொது‌ப் ப‌ணி‌த்துறை அமை‌ச்ச‌ர் துரைமுருக‌ன் ஆ‌கியோ‌ர் நே‌ற்று பா‌ர்வை‌யி‌ட்டன‌ர்.

அ‌ப்போது அமைச்சர் மு.க.ஸ்டாலின் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், சென்னைக்கு குடிநீர் தரக்கூடிய பூண்டி ஏரியில் 496 மில்லியன் கனஅடி நீரும், சோளவரம் ஏரியில் 76 மில்லியன் கனஅடி தண்ணீரும், புழல் ஏரியில் 1,733 மில்லியன் கனஅடி நீரும், செம்பரம்பாக்கம் ஏரியில் 1,351 மில்லியன் கனஅடி தண்ணீர் என மொத்தம் 3,656 மில்லியன் கனஅடி நீர் தற்போது இருப்பு உள்ளது.

இதனால், வரும் ஜனவரி மாதம் வரை சென்னை நகரில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது. இந்த நிலையில், கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், அடுத்த ஆண்டு இறுதி வரை சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு இருக்காது எ‌ன்று ‌ஸ்டா‌லி‌ன் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil