Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உயர்கல்வி நிறுவனங்களில் ‌பி‌ற்ப‌ட்டோ‌ர் இடஒது‌க்‌கீ‌ட்டு ஆப‌த்தை தடு‌க்க ராமதா‌‌ஸ் வல‌ியுறு‌த்த‌ல்!

உயர்கல்வி நிறுவனங்களில் ‌பி‌ற்ப‌ட்டோ‌ர் இடஒது‌க்‌கீ‌ட்டு ஆப‌த்தை தடு‌க்க ராமதா‌‌ஸ் வல‌ியுறு‌த்த‌ல்!
''உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்கு கொல்லைப்புறமாக வர இருக்கும் ஆபத்தை தடுப்பதற்கான நடவடிக்கையைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்'' என்று பா.ம.க ‌நிறுவன‌ர் ராமதாஸ் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌‌‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை முழுமையாக நிறைவேற்றுவதில் முட்டுக்கட்டை நிலை ஏற்பட்டிருக்கும் செய்தி வெளிவந்திருக்கிறது.

நாடு முழுவதிலும் உள்ள ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.களிலும், டெல்லி பல்கலைக்கழகம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் ஆகியவற்றிலும் இந்த பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு தொகுப்பில் 432 இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன என்றும், அந்த இடங்களைப் பொதுப் பட்டியலுக்கு மாற்றிப் பொது பிரிவினரைக் கொண்டு நிரப்ப வேண்டும் என்றும் சென்னையை சேர்ந்த ஒருவர் உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

வழக்கு விசாரணையின்போது, நிரப்பப்படாத இடஒதுக்கீட்டு இடங்களைப் பொதுப் பட்டியலுக்கு மாற்றிப் பொது பிரிவினரை கொண்டு நிரப்பிக்கொள்ள தடையில்லை என்று ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தீர்ப்புகளை சுட்டிக்காட்டி நீதிபதிகள் தெரிவித்ததாக வெளிவந்திருக்கும் செய்தி அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது.

பிற்படுத்தப்பட்டோருக்கான 27 ‌விழு‌க்காடு இடஒதுக்கீட்டு இடங்கள் முழுமையாக நிரப்பப்படாமல் இருப்பதற்கு போட்டித் தேர்வுக்கான குறைந்தபட்ச மதிப்பெண் பெற்ற போட்டியாளர்கள் தேவையான அளவுக்கு இல்லை என்பது மட்டும் காரணமல்ல; பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டு உரிமையில் இருந்து பிற்படுத்தப்பட்டோரில் வசதி படைத்தோரை (கிரீமிலேயர்) விலக்கி வைத்திருப்பது தான் முக்கிய காரணம் ஆகும்.

பிற்படுத்தப்பட்டோரில் வசதி படைத்தோருக்கும் இடஒதுக்கீட்டு சலுகையை வழங்கிக் காலி இடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசு உறுதியான முடிவை மேற்கொள்ள வேண்டும். இடஒதுக்கீட்டில் வசதி படைத்தோரை ஒதுக்கி வைக்கும் முடிவை மாற்றுவதற்கான காலம் வந்துவிட்டது என்பதையே இப்போது தொடரப்பட்டிருக்கும் இந்த வழக்கு எடுத்துக்காட்டுகிறது. இதற்கு பதிலாக காலி இடங்களைப் பொதுப் பட்டியலுக்கு மாற்றிப் பொதுப்பிரிவினரை கொண்டு நிரப்புவது என்பது சமூக நீதிக்கு எதிரானதாகும்.

இதற்கு ஏற்கனவே வழங்கப்பட்டிருக்கும் நீதிமன்றத் தீர்ப்புகள் இடையூறாக இருக்கும் பட்சத்தில் அந்தத் தீர்ப்புகளை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் மேற்கொள்ள வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் பதில் மனு தாக்கல் செய்யும்போது, இடஒதுக்கீட்டுச் சலுகை என்பது அந்த பிரிவினருக்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்ற கொள்கை முடிவினை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அதனை உ‌ச்ச ‌‌நீ‌திம‌ன்ற‌‌த்தையும் ஏற்கச் செய்ய வேண்டும்.

தமிழக அரசு இது குறித்து மத்திய அரசின் கவனத்தை உடனடியாக ஈர்க்க வேண்டும். அதன் மூலம் உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டிற்கு கொல்லைப்புறமாக வர இருக்கும் ஆபத்தை தடுப்பதற்கான நடவடிக்கையைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்'' எ‌ன்று ராமதா‌ஸ் வ‌‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil