பாரதிய ஜனதா கட்சியின் மாநிலப் பொதுக்குழுக் கூட்டம் சேலத்தில் வரும் 27ஆம் தேதி நடைபெறுகிறது என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பா.ஜ.க. மாநிலப் பொதுக்குழு கூட்டம், சேலத்தில் 27ஆம் தேதி காலை 9மணி முதல் மாலை 4.30 மணி வரை நடக்கிறது. 26ஆம் தேதி காலை மாநில நிர்வாகிகள் கூட்டமும் பிற்பகலில் மாநில செயற்குழு கூட்டமும் நடக்கிறது.
இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங், தேசிய இணை அமைப்பு பொதுச்செயலர் சதீஷ், தமிழக பார்வையாளர் ரவிசங்கர் பிரசாத், மாநில தலைவர் இல.கணேசன், தேசிய செயலர் திருநாவுக்கரசர், நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
நாடாளுமன்றத் தேர்தல் தயாரிப்பு நடவடிக்கைகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.