Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அவசர மருத்துவ ஊர்தி சேவைத் திட்டம்: கருணா‌நி‌தி துவ‌க்க‌ம்!

அவசர மருத்துவ ஊர்தி சேவைத் திட்டம்: கருணா‌நி‌தி துவ‌க்க‌ம்!
, திங்கள், 15 செப்டம்பர் 2008 (16:29 IST)
அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி அவசர மருத்துவ ஊர்தி சேவைத் திட்ட‌த்தை முதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி இ‌ன்றதொடங்கி வைத்தார்.

இதகு‌றி‌த்தத‌மிழஅரசஇ‌ன்று ‌விடு‌த்து‌ள்செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், "கிராமப் பகுதிகளில் மகப்பேறு காலங்களில் கர்ப்பிணிப் பெண்களும், விஷக் கடிகளாலும், வெறி நா‌ய்களாலும் கடிபட்டுப் பாதிக்கப்படுவோரும், உடனடியாகச் சிகிச்சை பெற முடியாமல் உயிரிழக்நேரிடுகிறது.

TN.Gov.TNG
விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு உரிய சிகிச்சைகளை உடனடியாக அளிப்பதற்காக, அவசரகால மருத்துவ ஊர்தி சேவைத் திட்டத்தை நடைமுறைப்படுத்திட முடிவு செ‌ய்து, அதன்படி, ரூ.16,83,00,000 செலவில் 187 வட்டாரங்களில் அவசரகால மருத்துவ ஊர்திகள் வழங்கப்பட்டு, தொண்டு நிறுவனங்கள் மூலம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இத்திட்டத்தைத் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மேலும் செம்மையாகச் செயல்படுத்திடவும், மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்திடவும் ஆந்திர மாநிலம் ஐதராபாத் நகரைச் சேர்ந்த இ.எம்.ஆர்.ஐ. (E.M.R.I.) என்னும் தொண்டு நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்திட தமிழக அரசு 6.5.2008 அன்று, புரிந்துணர்வு ஒப்பந்தம் செ‌ய்து‌ள்ளது. அத‌ன் மூல‌ம் இந்த இ.எம்.ஆர்.ஐ. நிறுவனத்திடம் முதற்கட்டமாக குளிர்சாதன வசதி, தேவையான மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் பொருத்தப்பட்டுள்ள 198 அவசர கால மருத்துவ ஊர்திகள் தமிழக அரசினால் ரூ.17,82,00,000 செலவில் வழங்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்பட்டுவரும் 187 அவசரகால மருத்துவ ஊர்திகளும் இத்திட்டத்துடன் இணைக்கப்பட்டூ.34,65,00,000 மதிப்பீட்டிலான 385 அவசரகால மருத்துவ ஊர்திகள் இத்திட்டத்தில் ஈடுபடுத்தப்படும்.

இத்திட்டத்திற்குரிய 'மத்திய செயல்பாட்டு நிலையம்', சென்னை அரசு கஸ்தூரிபா காந்தி மகப்பேறு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சுகாதார மேற்பார்வையாளர் பயிற்சி நிலையத்தில், இ.எம்.ஆர்.ஐ. நிறுவனத்தினால் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது.

webdunia
TN.Gov.WD
மருத்துவத்துறை, தீயணைப்புத் துறை, காவல் துறை ஆகிய துறைகளின் அவசர உதவி தேவைப்படும் பொதுமக்கள், இத்திட்டத்திற்கெஅமைக்கப்பட்டுள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்.108-ஐ பயன்படுத்தி, தமிழகத்தின் எந்த ஒரு பகுதியிலிருந்தும் இந்த மையத்தைத் தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு கொண்ட சில நொடிகளில், அவசர கால மருத்துவ ஊர்தி புறப்பட்டு, அரை மணி நேரத்திற்குள் நோயாளி இருக்கும் இடத்திற்குச் சென்று, அவருக்குத் தேவைப்படும் முதல் கட்ட அவசர சிகிச்சையை அளிக்கும். பின்னர், அந்த நோயாளியை மருத்துவமனைக்குக் கொண்டு வந்து, அவருக்குத் தேவையான மருத்துவ உதவிகளை உடனடியாக வழங்கும்.

இந்தச் சிகிச்சைக்காக நோயாளியிடம் முதல் 24 மணி நேரத்திற்கு எந்த கட்டணமும் வசூலிக்கப் படமாட்டாது. அதன் பின்னர், நோயாளியின் விருப்பத்திற்கேற்ப, அவர் விரும்பும் மருத்துவமனையில் சேர்ந்து தொடர்‌ந்து சிகிச்சையைப் பெற்றுக் கொள்ளலாம்.

இத்திட்டத்திற்காக மொத்தம் 385 மருத்துவ ஊர்திகளுக்கு அனுமதிக்கப்பட்ட ரூ.34,65,00,000 தவிர இத்திட்டத்திற்குரிமத்திய கட்டுப்பாட்டு மையத்திற்கான கட்டடம் புதிதாகக் கட்டப்படவும், இதர நிர்வாகச் செலவுகளுக்காகவும் மேலும் ரூ. 36 கோடியை அரசு வழங்கியுள்ளது.

நெருக்கடி நிலையில் உள்ள உயிர்களைக் காக்கும் இந்தத் திட்டத்தின்கீ‌ழ், முதலில் சென்னையில் 20 அவசர மருத்துவ ஊர்திகளை வழங்கி முதலமைச்சர் கருணா‌நி‌தி இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தார். மற்ற மாவட்டங்களுக்கும் இத்திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும்" எ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil