Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குறைகளை சு‌ட்டி‌க்கா‌ட்டு‌ங்க‌ள் த‌வி‌ர்‌க்க பா‌ர்‌க்‌கிறோ‌ம்: கருணாநிதி!

குறைகளை சு‌ட்டி‌க்கா‌ட்டு‌ங்க‌ள் த‌வி‌ர்‌க்க பா‌ர்‌க்‌கிறோ‌ம்: கருணாநிதி!
, திங்கள், 15 செப்டம்பர் 2008 (17:56 IST)
''ஒரதிட்டத்தை குறை கூறுவதை விட அதில் இருக்கிற குறையை சுட்டிக்காட்டுங்கள், குறையை களைந்து விட்டு நிறைவாக செய்ய முற்படுகிறோம்'' எ‌ன்றமுதலமை‌ச்ச‌ரகருணா‌நித‌ி கே‌ட்டு‌ககொ‌ண்டா‌ர்.

webdunia photoFILE
அ‌றிஞ‌‌ரஅ‌ண்ணநூ‌ற்றா‌ண்டு ‌விழாவையொ‌ட்டி ஒரரூபாய்க்கு ஒரகிலோ அரிசி வழங்கும் திட்ட‌த்ததொட‌ங்‌கி வை‌த்தமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி பேசுகை‌யி‌ல், பெரியாரின் எண்ணங்கள் ஈடேற வேண்டும். அண்ணாவின் கனவுகள், அறிவுரைகள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பாடுபட்டு அதன் விளைவை உங்களோடு பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பில் ஒன்றுதான் இ‌ந்த ‌தி‌ட்ட‌ம். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பேன் என்று அண்ணன் போதித்த அந்த சிரிப்பை காண படி அரிசி திட்டத்தை 1967-ல் அறிவித்தார். அவர் கொண்டு வந்த திட்டத்தை இன்று நிறைவேற்றி வைப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

தமிழக மக்கள் இந்த திட்டத்தால் மகிழ்ச்சி கண்டும் கூட நம்மை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் சிலருக்கு இல்லை. ஏற்றுக் கொள்வது எதிரிகளுக்கு சாதாரண ‌விடயமல்ல. மனம் இருந்தால் தான் அந்த பக்குவம் வரும். மனமே இல்லாதவர்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது. குறைந்த விலைக்கு அரிசி போ‌ட்டா‌லதிருட்டு போய் விடும் என்கிறார்கள். ஏன் இந்த சந்தேகம். திருடனுக்கு வர வேண்டிய சந்தேகம் வரலாமா?

எந்த திட்டத்திலும் குறைகள் இருக்கலாம். எல்லாம் நிறைவாக இருக்கும் என்று சொல்ல முடியாது. தேச தந்தை காந்தியே மறு அவதாரம் எடுத்து பிரதமராகவோ, முதலமைச்சராகவோ அமர்ந்தாலும் எல்லாம் நிறைவாக இருக்கும் என்று சொல்ல முடியாது. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு சொல்கிறேன். கடவுளே அவதாரமாக வந்து ஆட்சி செய்தாலும் குறைகள் இருக்கும்.

எந்த நல்ல காரியம் செய்தாலும் அதில் குறையை மட்டும் சொல்கிறார்களே என்பதற்காக அந்த திட்டத்தையே விட்டு விட்டால் அதை விட பைத்தியகாரத்தனம் வேறு எதுவும் இருக்காது. திட்டத்தையே குறை கூறுவதை விட அதில் இருக்கிற குறையை சுட்டிக்காட்டுங்கள். குறையை களைந்து விட்டு நிறைவாக செய்ய முற்படுகிறோம். அதை விட்டுவிட்டு இந்த திட்டமே உருப்படாது, இது தேவையற்ற திட்டம் என்று சொன்னால் அது என்னை சொல்வதாக ஆகாது. அண்ணா அறிவித்த படி அரிசி திட்டத்தை குறை கூறுவதாக ஆகிவிடும்.

அரிசி விலை குறைவு, வாங்கி சாப்பிடுங்கள் என்கிறார் கருணாநிதி. விஷம் கூட விலை குறைவுதான் என்றால் வாங்கி சாப்பிடுவாரா என்று ஒருவர் பேசி இருக்கிறார். விஷத்தை வாங்கி சாப்பிடும் அளவுக்கு இங்கு நிலைமை மோசம் இல்லை. ஏழை எளியவர்கள், நடுத்தர மக்கள் குடும்பத்தில் செலவுகளை குறைக்க இந்த திட்டம் பயன்படுகிறதா என்பதை எண்ணி பார்க்க வேண்டும்.

இந்த நல்ல திட்டத்தை தேவையில்லை என்பது நல்லதல்ல, நாட்டுக்கும் நல்லதல்ல. எல்லா கட்சிகளும், எல்லோரும் இந்த திட்டத்தை ஆதரிக்க வேண்டும். ஆதரிக்காவிட்டால் மக்கள் முன் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டு விடுவார்கள். எல்லா மக்களும், எல்லா கட்சியினரும் இந்த நல்ல திட்டத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் எ‌ன்றமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil