திருச்சி அருகே அரியமங்கலம் என்ற இடத்தில் இன்று அதிகாலை வேனும், லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் அ.இ.அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார்.
தேனியில் நேற்றிரவு அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா பங்கேற்ற பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதுமிருந்து ஏராளமான அதிமுக தொண்டர்கள் தேனிக்கு சென்றிருந்தனர்.
பொதுக் கூட்டம் முடிந்ததும் வேனில் மகாலிங்கம் (55) சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். இன்று அதிகாலை திருச்சி மாவட்டம் அரியமங்கலம் பால்பண்ணை அருகே வேன் வந்த போது எதிரே வந்த லாரி மோதியது.
இந்த விபத்தில் மகாலிங்கம் நிகழ்விடத்திலேயே பலியானார். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர். மகாலிங்கத்தின் உடல் சென்னை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
படுகாயம் அடைந்தவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.