Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அ‌ண்ணா ‌சிலை‌க்கு கருணா‌நி‌தி ம‌ரியாதை!

அ‌ண்ணா ‌சிலை‌க்கு கருணா‌நி‌தி ம‌ரியாதை!
, திங்கள், 15 செப்டம்பர் 2008 (15:48 IST)
தமிழகம் முழுவதும் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்ப‌ட்டவருகிறது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள அண்ணா உருவச்சிலைக்கு முதலமைச்சர் கருணாநிதி இன்று காலை அணிவித்து மரியாதை செலுத்‌தினா‌ர்.

அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், கனிமொழி எம்.பி., மத்திய அமை‌ச்ச‌ர்க‌ள், நாடாளும‌ன்ற, ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

இதை தொடர்ந்து அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலைக்கு அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், சாமிநாதன், பரிதிஇளம் வழுதி, கே.கே.எ‌ஸ்.எ‌ஸ்.ஆ‌ர்.ராமச்சந்திரன், கே.ராமச்சந்திரன், கீதாஜீவன், தமிழரசி, துணை அவை‌த்தலைவ‌ர் வி.பி.துரைசாமி, மத்திய அமை‌ச்ச‌ர்கள் சுப்பு லட்சுமி ஜெகதீசன், ராதிகா செல்வி, தென்சென்னை மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் உள்பட ஏராளமானோர் கலந்து அ‌ஞ்ச‌லி செலு‌த்‌தின‌ர்.

இன்று மாலை 5 மணிக்கு அண்ணா நூற்றாண்டு விழா கவியரங்கம் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறுகிறது.

''அணையா விளக்கு அண்ணா'' என்ற தலைப்பில் நடைபெறும் கவியரங்கத்திற்கு முதலமைச்சர் கருணாநிதி தலைமை தாங்குகிறார்.

இதில் கவிஞர்கள் வாலி, அப்துல்ரகுமான், வைரமுத்து, மு.மேத்தா, பாதிரியார் வின்சென்ட் சின்னத்துரை, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு கவிதை வாசிக்கின்றனர்.

சென்னை கலைவாணர் அரங்கில் காலை 11 மணிக்கு அறிஞர் அண்ணா சிறப்பு புகைப்பட கண்காட்சியை நிதி அமைச்சர் அன்பழகன் தொடங்கி வைக்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil