Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சமைய‌ல் எ‌ரிவாயு இணைப்பு பெறுவதற்கு குடு‌ம்ப அ‌ட்டை க‌ட்டாய‌மி‌ல்லை: அரசு அறிவிப்பு!

சமைய‌ல் எ‌ரிவாயு இணைப்பு பெறுவதற்கு குடு‌ம்ப அ‌ட்டை க‌ட்டாய‌மி‌ல்லை: அரசு அறிவிப்பு!
, சனி, 13 செப்டம்பர் 2008 (09:14 IST)
சமையல் எ‌ரிவாயஇணைப்பு பெறுவதற்கு குடு‌ம்அ‌ட்டகட்டாயமில்லை. கேஸ் முகமைகள் கேட்கும் வேறு ஆவணங்களே போதுமானது என்று த‌‌மிழஅரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், தற்போது எரிவாயு (சமையல் கேஸ்) இணைப்பு பெறுவதற்கு எண்ணெ‌யநிறுவனங்கள், எரிவாயு முகமைக‌ளஆதார ஆவணமாக குடும்ப அட்டையை வலியுறுத்துகிறது.

இதை தீர ஆராய்ந்த அரசு பொது மக்கள் எரிவாயு இணைப்புகளை பெறுவதற்கு குடும்ப அட்டை தேவை என்ற நிபந்தனையை அரசு தளர்த்தியுள்ளது.

மேலும், குடும்ப அட்டையின்றி தேசிய எண்ணெ‌யநிறுவனங்களால் ஏற்கப்படும் வேறு ஏதேனும் தகுந்த ஆவண ஆதாரங்களின் அடிப்படையில் எரிவாயு இணைப்புகளை பெற்றுக் கொள்ளலாம் என்றும், எரிவாயு இணைப்பு வழங்க குடும்ப அட்டையை இனி வலியுறுத்தக் கூடாது என்றும் அரசு ஆணையிட்டுள்ளது.

குடு‌ம்ப அ‌ட்டையை த‌விர ம‌ற்ற ப‌த்து ஆவண‌‌ங்க‌ள் எவை: தொலைபேசி கட்டண ரசீது, கடவு‌சீ‌ட்டு, மின்கட்டண அட்டை, வீடு ஒதுக்கீடு ஆணை, ஆயுள் காப்பீடு ஆவணம், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை, வீடு பதிவு செய்த ஆவணம், வீட்டு வாடகை ரசீது, வருமான வரி செலுத்துவோருக்கான நிரந்தர கணக்கு எண் (பான் கார்டு), ஓட்டுநர் உரிமம்.

Share this Story:

Follow Webdunia tamil