அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இன்று காலை 8.30 நிலவரப்படி பேச்சிப்பாறை, வால்பாறை, பெரியாறு அணை ஆகிய இடங்களில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் பூதபாண்டி, குளித்தலை, தக்கலை, நீலகிரி மாவட்டம் தேவலா, நடுவட்டம் ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழையும், திருநெல்வேலி மாவட்டம் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி, நாகர்கோவில், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் தலா ஒரு செ.மீ மழை பெய்துள்ளது.