பண்டிகை காலத்தை முன்னிட்டு ரயில் பயணிகளின் வசதிக்காக திருச்சியில் இருந்து சென்னை, திருநெல்வேலிக்கு சிறப்பு ரயில் இயக்க தென்னக ரயில்வே முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வரும் செப்டம்பர் 14ஆம் தேதி காலை 5 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் அன்றைய தினம் முற்பகல் 11.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.
இதேபோல் செப்டம்பர் 14ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்படும் மற்றொரு சிறப்பு ரயில், சென்னை எழும்பூர் ரயில்நிலையத்தை அதிகாலை 3.15 மணிக்கு அடையும்.
திருச்சி- எழும்பூர் சிறப்பு ரயில் ஸ்ரீரங்கம், அரியலூர், விருத்தாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று முதல் மேற்கொள்ளப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.