Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மின்சாரத்தை கண்டுபிடித்தவர் எடிசன், மின்வெட்டை கண்டுபிடித்தவர் வீராசாமி: விஜயகாந்த்!

ஈரோடு செ‌ய்‌தியாள‌ர் வேலு‌ச்சா‌மி

மின்சாரத்தை கண்டுபிடித்தவர் எடிசன், மின்வெட்டை கண்டுபிடித்தவர் வீராசாமி: விஜயகாந்த்!
''தமிழ்நாட்டில் கடந்த இருபது ஆண்டுகளாக விலைவாசி குறையவில்லை'' என தே.மு.தி.க. தலைவர் நடிகர் விஜயகாந்த் குற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
ஈரோடு சூரம்பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்தில் க‌‌ல‌ந்து கொ‌ண்டு விஜயகாந்த் பேசுக‌ை‌யி‌ல், மின்சாரத்தை கண்டுபிடித்தவர் எடிசன். மின்வெட்டை கண்டுபிடித்தவர் மின்வெட்டு வீராசாமி. மின்வெட்டால் விவசாயம், ‌விசை‌த்த‌றி தொ‌‌ழி‌ல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மின்விசிரி தயாரிக்கும் நிறுவனங்களுக்கு இர‌ண்டு ரூபா‌ய்க்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. மற்றவர்களுக்கு நா‌ன்கு ரூபா‌ய்‌க்கு தரப்படுகிறது. இந்த சுமை மக்கள் தலைமீது வைக்கப்படுகிறது. விவசாய கடன் தள்ளுபடியில் சிறு, குறு விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை.

நான் நினைத்தால் மற்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்க முடியும். ஆனால் வாடிய மக்களை வாழ வைக்க வேண்டும் என்பதற்காகவே தனித்து நிற்கிறேன். ஊரகவேலை வாய்ப்பு திட்டத்தில் தொழிலாளர் கூலி ரூ.80 முறையாக அதிகாரிகள் கொடுப்பதில்லை. இலவச தொலைக்காட்சி நல்லதிட்டம். கேபிள் இணைப்பும் இலவசமாக கொடுக்கவேண்டும். அரசு கேபிள் தற்போது தி.மு.க. கேபிளாகிவிட்டது.

அமைச்சரவையில் உள்ளவர்கள் ஆள்கடத்தல், நிலம் கடத்தல், கற்பழிப்பு போன்ற வழக்குகளில் ஈடுபட்டுள்ளனர்.ஒரு அமைச்சர் மீதான வழக்கை முதல்வர் விசாரித்ததாகவும் அவர் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாகவும் முதல்வர் கூறினார். நீதிமன்றம் கூறுவதற்கு முன்னரே முத‌ல்வர் எப்படி இப்படி கூறுகிறார்.

தனியார் கல்லூரிகள் பலவற்றில் காசுவாங்கிக்கொண்டு பல்கலைகழகமாக மாற்றுகின்றனர். தி.மு.க., ஆட்சியை மட்டுமல்ல அ.தி.மு.க., ஆட்சியாக இருந்தாலும் நான் இப்படித்தான் பேசுவேன். கடந்த 20 ஆண்டுகளாக தமிழகத்தில் விலைவாசி குறையவே இல்லை.

குடோனில் தேக்கிவைத்த அரிசி நாற்றம் எழும்பியுள்ளது. இதைத்தான் கிலோ ரூ.1 க்கு கொடுக்கின்றனர். அரசு பள்ளி மாணவர்கள் தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டிபோட முடிவதில்லை. கல்வியில் அடிமட்டத்தில் இருந்தே சமசீர்கல்வி கொண்டு வரவேண்டும். நரகாசூரன் இறந்தநாள்தான் தீபாவளி அதுபோல் தமிழகத்தில் என்று இந்த இரண்டு கட்சிகளும் இல்லாமல் போகிறதோ அன்றுதான் தீபாவளி ஆகும் எ‌ன்று விஜயகாந்த் பேசினார்.

Share this Story:

Follow Webdunia tamil