Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜெயலலிதாவுக்கு அத்வானி வாழ்த்து!

Advertiesment
ஜெயலலிதாவுக்கு அத்வானி வாழ்த்து!
, வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (10:54 IST)
அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலராக 6வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஜெயலலிதாவுக்கு, எல்.கே.அத்வானி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

webdunia photoWD
இது தொடர்பாக அ.இ.அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஜெயலலிதா 6-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டதை முன்னிட்டு முன்னாள் துணை பிரதமரும்,
webdunia
webdunia photoWD
நாடாளுமன்ற மக்களவை குழு எதிர் கட்சித்தலைவருமான எல்.கே.அத்வானி, அரியானா மாநில முன்னாள் முதலமை‌ச்சரு‌ம், இந்திய தேசிய லோக்தள் கட்சியின் தலைவருமான ஓம்பிரகாஷ் சவுதாலா, மாநிலங்களவை முன்னாள் துணைத்தலைவர் டாக்டர் நஜ்மா ஹெப்துல்லா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.

மதசார்பற்ற ஜனதா தள தலைவர் தேவேகவுடா, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தேசிய லீக் கட்சி மாநில தலைவர் எம்.பஷீர்அகமது, சமூக நீதிக்கட்சி தலைவர் ஜெகவீரபாண்டியன், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் தலைவர் வேட்டவலம் மணிகண்டன் உள்பட தோழமைக் கட்சிகளை சேர்ந்தவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டனர். அதற்கு அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தமது நன்றியை தெரிவித்தார்.

அதே போல், ஏராளமான கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும், ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர் எ‌ன்றகூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil