புதுக்கோட்டை: ''புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி புதிய கோட்டையாகத்தான் இருக்குமே தவிர, தேர்தல் ஆணையம் அறிக்கையால் பழைய கோட்டையாக மாறாது'' என மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசுடன் தமிழக அரசு இணக்கமாக உள்ளது. நாடாளுமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும். மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் அனைத்தும் மக்களிடம் முழுமையாக சென்றடையும் விதத்தில் தமிழக அரசு செயல்படுகிறது.
புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி புதிய கோட்டையாகத்தான் இருக்குமே தவிர, தேர்தல் ஆணையம் அறிக்கையால் பழைய கோட்டையாக மாறாது.
புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதியை மீண்டும் அறிவிக்கக்கோரி, அனைத்துக்கட்சிகள், தொண்டு நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள் ஒன்று கூடி நாடாளுமன்ற மீட்புக்குழுவை ஏற்படுத்தியுள்ளன. பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டது.
இப்போது உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. நீதித்துறை மூலம் புதுக்கோட்டை மக்களுக்கு நல்ல செய்தி வரும் என்று நம்புகிறேன் என்று ஜி.கே.வாசன் கூறினார்.