''மின்சாரம் தருவது அரசின் கடமை என்றும் தற்போது மின்வெட்டு நிலவுகிறது என்றால் அந்தக் கடமையில் இருந்து தமிழக அரசு தவறி விட்டது'' என்று தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் குற்றம் சாற்றியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தொழில் நிறுவனங்களுக்கு 4 மணி நேர மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் நிறுவனங்களுக்கு 4 மணி நேர மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாரம் ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மொத்தம் 78 மணி நேர மின்வெட்டு அமளியில் உள்ளது. மின்சாரம் தருவது அரசின் கடமை. மின்வெட்டு நிலவுகிறது என்றால் தமிழக அரசு அந்தக் கடமையில் தவறி விட்டது என்பது தான் பொருள்.
அயல்நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யும்போது அதிக மின்சாரம் தருவதாக உறுதியளிக்கப்படுகிறது. அந்த நிறுவனங்கள், இதனை முறைகேடாக பயன்படுத்துகின்றன, மின் சிக்கனத்தை அரசு கடைபிடிக்க வேண்டும்.
அடுக்கு மாடி குடியிருப்புகளுக்கு பணம் வாங்கிக் கொண்டு அனுமதி அளிப்பதால்தான் விதிமுறைகளை மீறி கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இதனைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எம்.ஜி.ஆர் உறவினர் விஜயன் கொலை வழக்கில் காவலர் ஒருவரே மூளையாக செயல்பட்டு இருப்பது அதிர்ச்சியை தருகிறது. காவல் துறையின் ஈரல் முக்கால் விழுக்காடு கெட்டுவிட்டதாக முதல்வர் முன்பு கூறியிருந்தார். இப்போதும் நிலைமை மாறி விடவில்லை.
சென்னையை உலுக்கிய சைக்கோ கொலை வழக்கில் காரணமானவர்களை கைது செய்திருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையான குற்றவாளிகளா என்பது தெரியவில்லை. காவல் துறை சீர்பட முதல்வர், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாலசுப்பிரமணியன் கூறினார்.