தமிழகத்தில் மின் தடை நேரத்தை உடனடியாக குறைக்க தமிழக அரசுக்கும், மின்வாரியத்துக்கும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த வசிகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொது நலமனுவில், அரசின் கவனக்குறைவினால் தமிழகத்தில் மின் வெட்டு ஏற்பட்டு உள்ளது. தினம் 8 மணி நேரம் ஏற்படும் மின்வெட்டினால் பொது மக்களுக்கு உண்டாகும் இழப்பை ஈடு செய்ய இயலாது.
அரசு விழாக்கள், அமைச்சர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்கள், அரசியல் கட்சிகள் நடத்தும் பொதுக் கூட்டங்கள் மற்றும் மின்சாரத்தை அதிகமாக பயன்படும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கங்கூலி, நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர், தமிழக மின்வாரியம் மற்றும் மின்துறை அமைச்சகத்தையும் இது குறித்து கால தாமதமின்றி நடவடிக்கை எடுக்குமாறும் முடிந்த அளவு மின்வெட்டை குறைந்து கொள்ள நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தினர்.
மேலும் எல்லா அரசியல் கட்சிகளும் தங்களது அரசியல் பொது கூட்டங்களை குறைத்துக்கொள்ளவும் என்றும் அறிவுறுத்தினர்.