பிரபல வயலின் வித்வான் குன்னக்குடி வைத்தியநாதன் உடல் நாளை தகனம் செய்யப்படுகிறது.
மாரடைப்பால் உயிரிழந்த பிரபல வயலின் சக்ரவர்த்தி குன்னக்குடி வைத்தியநாதன் உடல் சென்னை மந்தைவெளி கிரீஸ்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், தமிழக பா.ஜ.க தலைவர் இல.கணேசன், கர்நாடக இசைப் பாடகி சுதா ரகுநாதன், நல்லி குப்புசாமி செட்டியார், முன்னாள் தூர்தர்ஷன் கேந்திரா இயக்குனர் ஏ.நடராஜன், கவிஞர் வைரமுத்து, சீர்காழி சிவசிதம்பரம் உள்பட பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
அவரது உடல் நாளை பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.