சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே நேற்றிரவு மின்னல் தாக்கியதில் 2 விவசாயிகள் உடல் கருகி பலியானார்கள்.
இளையான்குடி அருகே உள்ள நெஞ்சாத்தூரை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவர் தனது வயலில் வேலைப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்னல் தாக்கியது. இதில் வெள்ளைச்சாமி உடல் கருகி பலியானார்.
இதேபோல், கண்டனியைச் சேர்ந்த விவசாயி கூடலிங்கம், நேற்று மாலை வயலில் வேலைப் பார்த்து விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த போது மின்னல் தாக்கி பலியானார்.