அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவை யொட்டி வரும் 14ஆம் தேதி தேனியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலர் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசுகிறார்.
இது தொடர்பாக அ.இ.அ.தி.மு.க தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''செப்டம்பர் 14ஆம் தேதி ஞாயிறன்று தேனியில் நடைபெறவுள்ள அ.இ.அ.தி.மு.க பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசுகிறார்.
அதற்கு அடுத்த நாளான 15ஆம் தேதி ஆண்டிப்பட்டியில் உள்ள அண்ணா சிலைக்கு கீழ் அமைந்துள்ள அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்துகிறார். மேலும் எம்.ஜி.ஆர் சிலைக்கும் அவர் மாலை அணிவிக்கிறார்.
இளைஞர் பாசறை, இளம்பெண்கள் பாசறை உறுப்பினர்கள் பயன் பெறும் வகையில் பல்வேறு சிறப்பு திட்டங்களையும் ஜெயலலிதா துவக்கி வைக்கிறார்'' என்று கூறப்பட்டுள்ளது.