Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மின்வாரிய அலுவலகங்கள் மு‌ன்பு போராட்டம்: வெ‌ள்ளைய‌ன்!

Advertiesment
மின்வாரிய அலுவலகங்கள் மு‌ன்பு போராட்டம்: வெ‌ள்ளைய‌ன்!
, சனி, 6 செப்டம்பர் 2008 (10:02 IST)
மி‌ன்வெ‌ட்டி‌லிரு‌ந்து த‌மிழக‌த்தை ‌மீ‌ட்க வ‌லியுறு‌த்‌தி வரு‌ம் 9ஆ‌ம் தே‌தி முத‌ல் ‌மி‌ன்வா‌ரிய அலுவலக‌ங்க‌ள் மு‌‌ன்பு தொட‌ர் போரா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

அது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் முழுவதும் மிகக் கடுமையான மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள மின்வெட்டே 5 மணிநேரத்தை எட்டிவிட்டது.

அறிவிக்கப்படாத திடீர் மின்வெட்டுகளையும் கணக்கில் சேர்த்தால், ஒட்டுமொத்த தமிழகமும் பல மணி நேரம் இருளில் மூழ்கிவிடும் அபாயம் இருப்பதை உணர முடிகிறது. மின்வெட்டிலிருந்து தமிழகத்தை மீட்க வலியுறுத்தியும் தொடர் போராட்டங்களை நடத்த இருக்கிறோம்.

அதன் முதல் கட்டமாக வரு‌ம் 9ஆ‌ம் தேதி இரவு 7 மணி முதல் 8 மணி வரை மாவட்ட தலைநகரங்களில் உள்ள மின்வாரிய அலுவலகங்கள் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி எங்களது அமைதியான எதிர்ப்பைத் தெரிவிக்க முடிவெடுத்துள்ளோம்'' எ‌ன்று வெ‌ள்ளைய‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil