Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நாகை மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படை துப்பாக்கிச் சூடு!

நாகை மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படை துப்பாக்கிச் சூடு!
, வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (13:59 IST)
கடலில் மீன் பிடித்துவிட்டு கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது, இ‌ந்‌திய கட‌ல் எ‌ல்லை‌க்கு‌ள் அ‌த்து‌‌மீ‌றி நுழை‌ந்து சிறிலங்க கடற்படை மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது. இதில் ஒருவர் காயமடைந்துள்ளார்!

கடந்த 3ஆம் தேதி நாகை மீனவர்கள் 6 பேர் படகு ஒன்றில் கடலில் மீன் பிடிக்கச் சென்றிருந்தனர். இவர்கள் மீன் பிடித்துவிட்டு நேற்று இரவு கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், இந்திய கடல் எல்லைக்குட்பட்ட கோடியக்கரைக்கு அருகே வந்துக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் அத்துமீறி நுழைந்த சிறிலங்க கடற்படையினர் மீனவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதில் குழந்தைவேலு (வயது 37) என்பவருக்கு காலில் குண்டு பாய்ந்துள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் இருந்து உயிர் தப்பி இன்று அதிகாலை கரைக்குத் திரும்பிய மீனவர்கள், காலில் குண்டு பாய்ந்த குழந்தைவேலுவை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

இது குறித்து மீன்வளத்துறை அதிகாரியிடமும், காவல் துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் மீது சிறிலங்க கடற்படையினர் இனி தாக்குதல் நடத்தமாட்டார்கள் என்று தமிழக முதலமைச்சரிடம் தேச பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் உறுதியளித்துவிட்டு சென்றுள்ள நிலையில், சிறிலங்க கடற்படையினர் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது மீனவர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil