Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு!

உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தல்: தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு!
, வெள்ளி, 5 செப்டம்பர் 2008 (10:32 IST)
உள்ளாட்சி மன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்களின் பட்டியலை, தி.மு.க. பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், செ‌ப்ட‌ம்ப‌ர் 18ஆ‌ம் தே‌தி நடைபெற உள்ள உள்ளாட்சிமன்ற இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வருமாறு:

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஒன்றியக்குழு 12-வது வார்டு உறுப்பினர் வேட்பாளர் -ச.சுப்பிரமணியம். மோப்பிரிபாளையம் பேரூராட்சி 1-வது வார்டு - த.கருணாகரன். தஞ்சாவூர் ஒன்றியக்குழு 9-வது வார்டு- ஜே.ராஜராஜன். அய்யம்பேட்டை பேரூராட்சி 11-வது வார்டு- இ.ஆர்.ரமேஷ். திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி 14-வது வார்டு- ச.சுந்தரராஜன்.

திருக்கழுக்குன்றம் ஒன்றியக்குழு 18-வது வார்டு - வி.புஷ்பலிங்கம். திருபெரும்புதூர் ஒன்றியக்குழு 13-வது வார்டு- கஸ்தூரி. விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் நகராட்சி 25-வது வார்டு - எஸ்.சந்தானம்.

நாமக்கல் மாவட்டம் மோகனூர் பேரூராட்சி 13-வது வார்டு எஸ்.சரவணன். மோகனூர் பேரூராட்சி 15-வது வார்டு என்.செந்தில்குமார். கொடைக்கானல் நகராட்சி 17-வது வார்டு ராணி.

தாராபடவேடு 3-ம் நிலை நகராட்சி 13-வது வார்டு எஸ்.கோவிந்தன். தாராபடரேடு 3-ம் நிலை நகராட்சி 15-வது வார்டு சி.ஜமுனா. திமிரி பேரூராட்சி 9-வது வார்டு பேபிமுனுசாமி. வினாப்பாக்கம் பேரூராட்சி 5-வது வார்டு சி.வெங்கடேசன்.

பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி 6-வது வார்டு பெ.ராமலிங்கம்.

Share this Story:

Follow Webdunia tamil