வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பீகார் மாநிலத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பீகார் மாநிலத்தையே நிலைகுலையச் செய்த வரலாறு காணாத வெள்ளப் பெருக்கின் காரணமாக பல லட்சம் ஏழை எளிய மக்கள் வீடு இழந்தும், நூற்றுக்கணக்கானோர் உயிர், உடைமைகளை இழந்தும் அந்த மாநிலமே சோகக் காடாக மாறி வருகிறது.
இந்த நிலைமையைக் கண்டு அதிர்ச்சியும் துயரமும் அடைந்த தமிழக முதலமைச்சர் கருணாநிதி அந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக மக்களின் சார்பில் ஆறுதலை வழங்குவதோடு, அந்த மாநிலத்தின் நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசின் சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதியில் இருந்து ரூ.10 கோடி வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.
இதற்கான காசோலை இன்றைய தினமே பீகார் மாநில முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.