தமிழகத்தில் நிலவும் மின் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக மத்திய மின்சாரத் துறை அமைச்சரை சந்தித்து தமிழகத்துக்கு கூடுதல் மின்சாரம் கேட்பதற்காக தமிழக மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி இன்று டெல்லி சென்றார்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமியுடன் தமிழ்நாடு மின்சார வாரியத் தலைவர் மச்சேந்திரநாதனும் உடன் சென்றுள்ளார்.
இந்த பயணத்தின் போது, மத்திய மின்சாரத் துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டேயைச் சந்தித்து பேசும் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் ஒதுக்கும்படி கேட்டுக்கொள்வார்.
மேலும், மத்திய நிலக்கரித் துறை இணை அமைச்சர் சந்தோஷ் பக்ரோடியாவையும் சந்தித்து, நெய்வேலி நிலக்கரி நிறுவனம் அதிக மின் உற்பத்தி செய்து தமிழகத்திற்கு கூடுதலாக மின்சாரம் வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்வார்.