Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை சரவணா ஸ்டோர்ஸில் தீவிபத்து!

Advertiesment
சென்னை சரவணா ஸ்டோர்ஸில் தீவிபத்து!
, திங்கள், 1 செப்டம்பர் 2008 (11:51 IST)
சென்னை தியாகராய‌ர் ரங்கநரத‌ன் தெரு‌வி‌ல் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் பாத்திரக்கடையில் இன்று காலை தீவிபத்து ஏற்பட்டது.

காலை 7 மணியளவில் பாத்திரக் கடைக்குள் இருந்து புகை வருவதை ஊழியர்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து தீயணைப்புப் படையினருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர்.

என்றாலும் அதற்குள் கடையில் இருந்த ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள், பர்னிச்சர்கள் மற்றும் பாத்திரங்கள் தீயில் எரிந்து சேதம் அடைந்திருக்கலாம் என்று தெரிகிறது.

பல மாடிகளைக் கொண்ட கட்டிடம் என்பதால், கடையில் ஏற்பட்ட தீ பல அடி உயரத்திற்கு கொழுந்து விட்டு எரிந்தது.

தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். உயிர்ச் சேதம் குறித்து எந்தவித தகவலும் இல்லை.

6வது மாடி‌யி‌ல் சமைய‌ல் செ‌ய்து கொ‌ண்டிரு‌ந்த போது ‌சி‌லி‌ண்ட‌ர் வெடி‌த்ததாகவு‌ம், இத‌ன் மூல‌ம் ‌விப‌த்து ஏ‌ற்ப‌ட்டதாகவு‌ம் கூற‌ப்படு‌கிறது. மேலு‌ம் ‌இ‌ந்த ‌விப‌த்‌‌தி‌ன் போது உ‌ள்ளே இரு‌ந்த 20 பே‌ர் அ‌தி‌ர்‌‌ஷ்டவசமாக உ‌யி‌ர் த‌ப்‌பின‌ர்.

ஆனாலு‌ம் விபத்துக்கான காரணம் குறித்து காவ‌ல்துறை‌யின‌ர் ‌தீ‌விர விசாரணை நடத்‌தி வரு‌கி‌ன்றன‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil