Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சென்னை தவிர தமிழகம் முழுவதும் நாளை முதல் தினமும் 5 மணி நேரம் மின்தடை!

சென்னை தவிர தமிழகம் முழுவதும் நாளை முதல் தினமும் 5 மணி நேரம் மின்தடை!
, ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2008 (11:26 IST)
சென்னையைத் தவிர தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் தினமும் 5 மணி நேரம் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதகுறித்து, தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்‌பி‌ல், தமிழகத்தின் மின்நிலைமையைக் கருத்தில் கொண்டு, தற்போது நடைமுறையில் உள்ள மின்சார விநியோக முறையில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளது.

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் நீங்கலாக தமிழகத்தின் இதர பகுதிகளில் தற்போது உபயோகத்தில் உள்ள 110 கே.வி. மின்னூட்டிகள் 4 பகுதிகளாக பிரிக்கப்பட்டு மின்சாரம் சுழற்சி முறையில் வழங்கப்படும்.

காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையான 12 மணி நேரத்தில், பொது மக்களுக்கு 9 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படும். மீதம் உள்ள 3 மணி நேரம் சுழற்சி முறையில் மின்தடை செய்யப்படும். விவசாயத்திற்கு தற்போது உள்ளது போலவே பகலில் 6 மணி நேரம் மட்டுமே மின்சாரம் வழங்கப்படும்.

மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான 4 மணி நேரத்தில், 3 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படும். மீதம் உள்ள 1 மணி நேரம் சுழற்சி முறையில் மின்தடை செய்யப்படும்.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையான 8 மணி நேரத்தில் 7 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படும். மீதம் உள்ள 1 மணி நேரம் சுழற்சி முறையில் மின்தடை செய்யப்படும்.

இந்த நடைமுறை செப்டம்பர் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும். மின்நிலைமை சீரடையும்போது இக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும்.

செ‌ன்னை புறநக‌ர் பகு‌தி‌யி‌ல் 3 ம‌ணி நேர‌ம் ‌மி‌ன் தடை: சென்னை மாநகராட்சி பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒன்றரை மணி நேரம் நீங்கலாக மற்ற நேரங்களில் மின்சாரம் தடையின்றி வழங்கப்படும்.

சென்னை புறநகர் பகுதிகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 2 மணி நேரமும், மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை 1 மணி நேரம் நீங்கலாக மற்ற நேரங்களில் மின்சாரம் தடையின்றி வழங்கப்படும்.

மாலை நேரங்களில் வெல்டிங் ஷெட்டுகள் பயன்படுத்துவது தடை செய்யப்படும்.

விவசாயிகள் மாலை 6 மணி முதல் 10 மணி வரை பம்பு செட்டுகள் இயக்க வேண்டாம் எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil