Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

குறை‌ந்த ‌‌விலை‌யி‌ல் தொட‌ர்‌ந்து அ‌த்‌தியாவ‌சிய பொரு‌‌ள்க‌ள் : தி.மு.க. மாவ‌ட்ட செயலர்க‌ள் ‌தீ‌ர்மான‌ம்!

குறை‌ந்த ‌‌விலை‌யி‌ல் தொட‌ர்‌ந்து அ‌த்‌தியாவ‌சிய பொரு‌‌ள்க‌ள் : தி.மு.க. மாவ‌ட்ட செயலர்க‌ள் ‌தீ‌ர்மான‌ம்!
, சனி, 30 ஆகஸ்ட் 2008 (16:18 IST)
அத்தியாவசியப் பொருட்களான உளுந்து, பருப்பு, சமையல் எண்ணெ‌ய் போன்றவைகளை குறைந்த விலையில் தற்போது த‌மிழக அரசு நியாய விலைக் கடைகளின் மூலமாக வழங்கி வருவதை மேலும் தொடர்ந்து வழங்கிட வேண்டுமென்று முதலமைச்சரை வ‌லியுறு‌த்‌தி ‌தி.மு.க. மாவ‌ட்ட செயல‌ர்க‌ள் ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்‌றி உ‌ள்ளன‌ர்.

தி.மு.க. மாவட்ட செயலர்கள் கூட்டம் முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் இன்று செ‌ன்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. இ‌ந்த கூட்டத்தில் தி.ு.பொதுசசெயலரஅன்பழகன், பொருளாளரஆற்காடவீராசாமி, துணபொதுசசெயலரு.க.ஸ்டாலின், முதன்மசெயலரதுரைமுருகன், ம‌த்‌திய அமை‌ச்ச‌ர்க‌ள் டி.ஆ‌ர்.பாலு, ஆ.ராசா, ரகுப‌தி மற்றுமஅனைத்தமாவட்டசசெயலர்கள் கலந்தகொண்டனர்.

இ‌ந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: அண்ணா நூற்றாண்டு விழாவினை தி.மு.க. சார்பில் ஓராண்டு காலத்திற்கு நட‌த்துவது. அண்ணா புகழ்பாடும் விழாக்களாக பட்டிமன்றம், கவியரங்கம், கருத்தரங்கம், இயல், இசை நாடக அரங்கம் என்ற அளவில் அந்த விழாக்கள் அமைய வேண்டும்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி செப்டம்பர் 15ஆ‌ம் தேதி காலை சென்னையிலே அண்ணா நூற்றாண்டு விழா தொடக்கமாக நடை பெறுகிற கவியரங்கிற்கு தலைமையேற்கவுள்ளார். அடுத்து அதே செப்டம்பர் 21ஆ‌‌ம் தேதியன்று திருச்சியிலே நடைபெறும் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா மற்றும் முப்பெரும் விழாவிலே கலந்து கொள்கிறார். அந்த விழா திருச்சி, பெரம்பலூர், கரூர், சிவகங்கை மாவட்டங்களை உள்ளடக்கி மண்டல விழாவாக நடைபெறும்.

வருமநவம்பரமாதமகோவை, ஈரோடு, நீலகிரி ஆகிமாவட்டஙகளினமண்டவிழகோவையிலும், 2009ஆ‌மஆண்டஜனவரி மாதமநெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, விருதுநகரஆகிமாவட்டங்களஉள்ளடக்கிமண்டவிழநெல்லையிலுமநடத்தப்படும்.

அடுத்ஆண்டமார்சமாதமசேலத்தில், சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களினமண்டவிழாவும், மாதமதஞ்சையில், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூரஆகிமாவட்டங்களினமண்டவிழாவும், ஜூனமாதமமதுரையில், மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரமமாவட்டங்களினமண்டவிழாவுமநடைபெறும்.

ஜூலமாதமகாஞ்சி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரமஆகிமாவட்டங்களஉள்ளடக்கிமண்டவிழகாஞ்சிபுரத்திலும், வடசென்னை, மத்தியசென்னை, தென்சென்னை, திருவள்ளூரஆகிமாவட்டங்களஉள்ளடக்கிமண்டவிழசென்னையிலுமநடைபெறும்.

தி.மு.க. சார்பில் மறைந்த சி.என்.ஏ.பரிமளம் மற்றும் சி.என்.ஏ.இளங்கோவன், சி.என்.ஏ.கௌதமன், சி.என்.ஏ.பாபு ஆகியோர் குடும்பங்களுக்கு செப்டம்பர் 15ஆ‌ம் தேதி அன்று சென்னையில் நடைபெறும் அண்ணா நூற்றாண்டு விழாவில் தலா ரூ.10 லட்சம் வீதம் மொத்தம் ரூ.40 லட்சம் நிதி வழங்க‌ப்படு‌ம்.

விலைவாசி உயர்வை ஓரளவு கட்டுப்படுத்தும் நோக்குடன் முக்கியமாக உணவுக்குப்பயன்படும் அத்தியாவசியப் பொருட்களான உளுந்து, பருப்பு, சமையல் எண்ணை போன்றவைகளை குறைந்த விலையில் தற்போது நமது அரசு நியாய விலைக் கடைகளின் மூலமாக வழங்கிவருவதை மேலும் தொடர்ந்து வழங்கிட வேண்டுமென்று முதலமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது எ‌ன்பது உ‌ள்பட ப‌ல்வேறு ‌தீ‌ர்மான‌ங்க‌ள் ‌நிறைவே‌ற்ற‌ப்ப‌ட்டன.

Share this Story:

Follow Webdunia tamil