காஞ்சிபுரம் அருகே சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மணல் லாரி மீது, காய்கறி ஏற்றி வந்த லாரி பயங்கரமாக மோதிய விபத்தில் ஓட்டுனர், கிளீனர் உள்பட 4 பேர் நிகழ்விடத்திலேயே பலியானார்கள்.
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார் சத்திரம் அருகே உள்ள கீரநல்லூரில் சாலை ஓரத்தில் மணல் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது.
அப்போது சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து காய்கறிகளை ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த மணல் லாரி மீது பயங்கரமாக மோதியது.
இதில் லாரி ஓட்டுனர், கிளீனர், இரண்டு சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஆகியோர் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே பலியானார்கள். மேலும் 4 சுமை தூக்கும் தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.