தமிழக அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் தி.மு.க.வுக்கு இனிவரும் தேர்தல்களில் நிச்சயமாக வெற்றி கிடைக்கப்போவதில்லை'' என்று ம.தி.மு.க பொதுசெயலர் வைகோ கூறியுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் திருபுவனத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், டீசல், உரத்தட்டுபாடு, விலை உயர்வு பிரச்னைகளால் மக்கள் கஷ்டப்படுகின்றனர்.
ஜெயலலிதா ஆட்சியில் தமிழகத்தில் 18,000 மெகாவாட் மின்உற்பத்தி இருந்தது. இப்போது 7,000 மெகாவாட்டாக குறைந்து விட்டது. மத்திய தொகுப்பில் இருந்து தமிழகத்துக்கு சரிவர மின்ஒதுக்கீடு செய்வதில்லை.
தி.மு.க தலைமையால், தமிழகத்துக்கு தேவையான மின்சாரத்தை கேட்டுப் பெற முடியவில்லை. தி.மு.க அமைச்சர்கள் கட்டப் பஞ்சாயத்து, ஆள்கடத்தல் போன்ற வழக்குகளில் சிக்குகின்றனர். இந்த அரசு மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதால் தி.மு.க.வுக்கு இனிவரும் தேர்தல்களில் நிச்சயமாக வெற்றி கிடைக்கப்போவதில்லை என்று வைகோ கூறினார்.