Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

க‌ல்லூ‌ரியை பல்கலை.யாக மாற்ற ‌எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்து மாணவர்கள் போரா‌ட்ட‌‌ம்!

க‌ல்லூ‌ரியை பல்கலை.யாக மாற்ற ‌எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்து மாணவர்கள் போரா‌ட்ட‌‌ம்!
, வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (16:34 IST)
கோவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை, பல்கலைக்கழகமாக மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு கல்லூரியுடன் சேர்த்து தமிழகத்திலுள்ள 5 அரசு கல்லூரிகளையும், இரண்டு தனியார் கல்லூரிகளையும் பல்கலைக்கழகங்களாக மாற்றுவதற்கு த‌மிழக அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கு மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என பல்வேறு தரப்பிலிருந்து பலத்த எதிர்ப்பு ‌கிள‌ம்‌பி வருகிறது.

இந்நிலையில், வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்ட கோவை அரசு கல்லூரி மாணவர்கள், தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அரசுக் கல்லூரிகளை பல்கலைக்கழகங்களாக மாற்றினால், இடஒதுக்கீடு இல்லாமல் போய்விடும், கல்விக் கட்டணம் உயர்த்தப்படும் என்பதால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவர் எ‌ன்று பெ‌‌ற்றோ‌ர்க‌ள் கூ‌றியு‌ள்ளன‌ர்.

ஆனா‌ல் உ‌ய‌‌ர் க‌ல்‌வி‌த்துறை அமை‌ச்ச‌ர் பொ‌ன்முடியோ, 'அரசு கல்லூரிகள், பல்கலைக்கழகங்களாக மாறினாலும் அனைத்து சலுகைகளும் தொடரும்' எ‌ன்று கூ‌‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil