நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை சிறிலங்க கடற்படையினர் கடுமையாக தாக்கியுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தை சேர்ந்த மீனவர்கள் நேற்று காலை 300 விசைப் படகுகளில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த சிறிலங்க கடற்படையினர், மீனவர்களை சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தினர். பின்னர் மீனவர்களின் வலைகளை அறுத்து கடலுக்குள் எறிந்தனர்.
இந்த பகுதிக்குள் மீன்பிடிக்க வந்தால் கொன்று விடுவதாக சிறிலங்க கடற்படையினர் மிரட்டிதால் உயிருக்கு பயந்து வலைகளை அங்கேயே போட்டு மீனவர்கள் கரைக்கு திரும்பினர்.
ஆனால் இந்த நிகழ்வு குறித்து காவல்துறையினரிடமோ, மீன்துறை அதிகாரிகளிடமோ அவர்கள் எந்த புகாரும் கூறவில்லை.
மீனவர்கள் மீது நடந்து வரும் இந்த தொடர் தாக்குதலால் அவர்கள் தொழில் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதனால் மீன்பிடி தொழிலையே கைவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.