ஈரோடு மாவட்டத்தில் தொடர் மின்வெட்டால் விவசாயிகள் கடும் பாதிப்பு!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
ஈரோடு மாவட்டத்தில் ஏற்பட்டு வரும் தொடர் மின்வெட்டால் பள்ளி குழந்தைகள் மற்றும் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக கடுமையான மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. நகர் பகுதிகளில் ஒரு நாளைக்கு சுமார் ஐந்து மணி நேரமும் இரவு நேரங்களில் அதிகமான நேரங்களிலும் மின்தடை ஏற்படுகிறது. கிராம பகுதியில் நாள் ஒன்றுக்கு ஏழு மணி நேரத்திற்கு மின்சாரம் தடைபடுகிறது.
இதன் காரணமாக இரவு நேரங்களில் பள்ளி குழந்தைகள் படிக்க முடியாமலும் வீட்டு பாடங்களை எழுத முடியாமலும் தவித்து வருகின்றனர். அதேபோல் கிராமத்தில் விவசாயிகள் தங்கள் கிணறுகளில் இருக்கும் தண்ணீரை வயலுக்கு பாய்ச்ச முடியாமலும் தவித்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் இரவில் ஏற்படும் மின்தடையை பயன்படுத்தி கோபி, சத்தியமங்கலம் பகுதிகளிலும், பவானி ஆற்றின் கரையோரத்திலும், தாழ்வான பகுதிகளிலும் வைக்கப்பட்டுள்ள கிணறு மின் இணைப்பு ஒயர்களை திருடர்கள் வெட்டி சென்று சம்பவங்களும் நடந்துள்ளது.