ஈரோடு மாவட்டத்தில் 2 இடங்களில் சாலை மறியல்!
ஈரோடு செய்தியாளர் வேலுச்சாமி
குடிநீர், பேருந்து வசதிகள் செய்து தரக்கோரி ஈரோடு மாவட்டத்தில் 2 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள குண்டடம் பகுதி மக்கள் தங்களுக்கு போதிய, முறையான குடிநீர் வசதி இல்லை என்றும் ஆழ்குழாய் மூலம் மட்டுமே குடிநீர் கிடைக்கிறது. அது போதுவதில்லை என கோரி குண்டடம் சூரியநல்லூர் சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் உறுதிமொழி வழங்கியதால் போராட்டம் கைவிடப்பட்டது.
இதேபோல் கோபிச்செட்டிப்பாளையம்- சத்தியமங்கலம் சாலையில் உள்ள கொத்துக்காடு பகுதியில் பள்ளி மாணவ, மாணவிகள் செல்ல அரசு போக்குவரத்துக் கழகம் போதிய பேருந்து வசதிகள் செய்யப்படவில்லை என்றும் ஏற்கனவே சென்று வரும் பேருந்து நேரத்தையும் மாற்றிவிட்டனர் என்றும் கூறி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் கடத்தூர் காவல் துறை உதவி ஆய்வாளர் ஆறுமுகம் நடத்திய பேச்சுவார்தையில் சாலை மறியல் கைவிடப்பட்டது.