Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எ‌ன் ‌மீது பொய்யான கு‌ற்ற‌ச்சா‌ற்று: அமைச்சர் கே.பி.பி.சாமி விளக்கம்!

Advertiesment
எ‌ன் ‌மீது பொய்யான கு‌ற்ற‌ச்சா‌ற்று: அமைச்சர் கே.பி.பி.சாமி விளக்கம்!
, வியாழன், 28 ஆகஸ்ட் 2008 (10:55 IST)
''சிலரை நான் மிரட்டியதாக வந்த செய்திகள் அனைத்தும் மு‌ற்‌றிலு‌ம் தவறானவை'' என்று மீன்வளத் துறை அமைச்சர் கே.பி.பி.சாமி விளக்கம் அளித்துள்ளார்.

TN.Gov.FILE
இதகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ''நான் வி.எல்.தண்டபாணி என்பவரை மிரட்டியதாக வெளிவந்துள்ள தகவல்கள் பொய்யானவை. வி.எல்.தண்டபாணி, குமார் ஆகியோர் யார் என்பது எனக்கு தெரியாது.

வி.எல்.தண்டபாணி என்பவரிடம் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக வெளிவந்த தகவல்கள் முற்றிலும் தவறானவை.

இந்த செய்தியை படித்தவுடன், முதலமைச்சர் கருணாநிதி, நிதி அமைச்சர் க.அன்பழகன் மற்றும் தி.மு.க. தலைமைக் கழகத்திடம், அவை பொய்யானவை என்று விளக்கம் அளித்து இருக்கிறேன். என்னைப் பற்றி தவறான செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது சட்டப்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எ‌ன்று அமை‌ச்ச‌ர் சா‌‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil