நாகப்பட்டினம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு 822 வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளதாக சென்னையைச் சேர்ந்த மேம்பாட்டு வளர்ச்சி குழுமத்தின் (டி.பி.ஜி.) தலைமை செயல் அதிகாரி சாலமோன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாகப்பட்டினம், தூத்துக்குடியில் கட்டப்பட்டுள்ள இந்த வீடுகள் ஒவ்வொன்றும் தலா ரூ.2.75 லட்சம் செலவில் கட்டப்பட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஆழிப்பேரலையால் பாதிக்கப்பட்ட நாகப்பட்டினம், தூத்துக்குடி மாவட்ட மீனவர்களுக்கு, 145 படகுகள் மற்றும் இயந்திரங்கள் வழங்கியது உள்பட நிவாரண உதவி வழங்க டி.பி.ஜி. நிறுவனம் ரூ.4.10 கோடி செலவிட்டுள்ளது என்று சாலமோன் கூறினார்.