திருச்சி அருகே அரசு பேருந்தும், தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 25 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.
சென்னையில் இருந்து அரசு பேருந்து ஒன்று செங்கோட்டைக்கு இன்று அதிகாலை சென்று கொண்டிருந்தது. திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகானூர் அருகே அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது.
அப்போது, திருச்சியில் இருந்து பெரம்பலூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 25 பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.
அவர்கள் அனைவரும் திருச்சியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.