திருச்சி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்துள்ளது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் அதிகபட்சமாக 156 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்தபடியாக கல்லணையில் 140.6 மி.மீ., பொன்மலையில் 136 மி.மீ, திருச்சி ரயில்வே சந்திப்பு 72.2 மி.மீ., திருச்சி நகரம் 60.4 மி.மீ. மழை பெய்துள்ளது.
மணப்பாறையில் 49.6 மி.மீ., கோவில்பட்டி 45.4 மி.மீ., மேட்டூர் 42.6 மி.மீ., நாவலூர் குட்டபட்டு 37.4 மி.மீ., பொன்னனையார் அணை 35.2 மி.மீ., மாயனுர் 26.6 மி.மீ., கல்லாகுடி 13.1 மி.மீ., லால்குடி 11.2 மி.மீ., மருங்காபுரி மற்றும் புல்லம்பாடியில் தலா 10.2 மி.மீ., முக்கொம்பு அணை 8.4 மி.மீ. மழையும் பெய்துள்ளது.