ஆந்திராவில் மோசடி வழக்கு தொடர்பாக அம்மாநில காவல் துறையினரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ்-க்கு தப்பித்துச் செல்ல முயன்ற போது சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் அமீர்பேட் என்னுமிடத்தைச் சேர்ந்தவர் அனில் குமார் (38). இவர் ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்த்து வருகிறார்.
இவர் மீது பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் மோசடி வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. இவரை ஆந்திரப் பிரதேச காவல் துறையினர் தேடி வந்தனர். இது தொடர்பாக நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் அவர் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று காலை குடியுரிமை அதிகாரிகள் பாரீஸ் செல்ல இருந்த பயணிகளிடம் நடத்திய சோதனையில் இவர் தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து குடியுரிமை அதிகாரிகள் அவரை விமான நிலைய காவல் துறை அதிகாரிகளிடம் ஒப்படடைத்தனர். இந்த குற்றவாளி கைது செய்யப்பட்டதைப் பற்றி விமானநிலைய காவல் துறையினர் ஆந்திரப் பிரேதச காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்