தமிழகத்தில் நேற்று உட்புற பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ளது. வால்பாறையில் அதிகபட்சமாக 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அடுத்ததாக பென்னாகரத்தில் 8 செ.மீ மழையும், கரூரில் 7 செ.மீ மழையும் பெய்துள்ளது.
குமாரபாளையத்தில் 4 செ.மீ மழையும், சங்கராபுரம், நாமக்கல், குன்னூர், அரவக்குறிச்சி, உத்தமபாளையம் ஆகிய இடங்களில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
அடுத்த இரண்டு நாட்களில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உட்புற பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.