சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா உறவினர் பாஸ்கரனுக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை அளித்து மத்திய புலனாய்வு கழக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அ.இ.அ.தி.மு.க. கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதாவின் உடன் பிறவா தோழி சசிகலாவின் உறவினர் பாஸ்கரன். இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மத்திய புலனாய்வு கழக நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி நாகநாதன், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பாஸ்கரனுக்கு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், 20 லட்சம் ரூபாய் அபராதமும், அந்த அபராதத் தொகையை கட்டத்தவறினால், மேலும் 10 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.
இதேபோல் பாஸ்கரனின் மனைவி ஸ்ரீதலா தேவிக்கு 3 ஆண்டு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி, ரூ.10 லட்சம் அபராதம் விதித்தார்.
இந்த அபராதத்தொகையை கட்டத்தவறினால் மேலும் 9 மாதங்களுக்கு சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி நாகநாதன் தீர்ப்பளித்தார்.